By WiseAss Fool
பாபா திரை ப்படம் வெ ளிவந்த ஆண்டு 2002. அப்பொழுது எனக்கு வயது 13. அந்நாளில் திரை அரங்கம் செ ன்று படம் பார்க்கும் வாடிக்கை பெ ரிதாக இல்லாததால், திருட்டு வீசீடீ-இல் என்னுடை ய பால்ய நண்பன் வீட்டில் பார்த்த ஞாபகம் எனக்கு நன்றாக இருக்கிறது. எனக்கு பெ ரிதாக புடிக்காத படம் அது. பிடிக்காது என்று சொல்வதை விட நான் மிகவும் எதிர்பார்த்து பின் என் எதிர்பார்ப்பிற்கு ஏற்றவாறு அத்திரை ப்படம் இல்லாத காரணத்தினால் பிடிக்காமல் போனது என்று சொல்லலாம்.
பிடிக்காமல் போனதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. முதலில் எனக்கு பாபா பட பாடல்கள் படை யப்பா அளவுக்கு பிடிக்கவில்லை . மாயா மாயா, ராஜ்யமா போன்ற slow பாடல்களை எதற்கு தான் ரஜினி ரஹ்மானை இசை அமை க்க அனுமதித்தார் என்று நினை த்தது என்னுடை ய பதின்மூன்று வயது மூளை . ரஜினியின் introduction பாடலை ஏன் எஸ். பி. பி பாடவில்லை என்றும் மிகுந்த கோவத்தில் நான் சில மாலை களை கழித்தது என் நினை வில் இன்றும் இருக்கிறது. ஆறுதல் பரிசாக எஸ். பி. பி கிச்சு கிச்சு தா பாடல் பாடி இருந்தாலும், டூயட் பாடல்களை நாம் கே ட்டால் நம் ஆண்மை க்கு இழுக்கு வந்து விடுமோ என்று நான் fast அல்லது குத்து பாடல்களே மிக அதிகமாக கே ட்ட நாட்கள் அவை . மெ ல்லிசை பாடல்கள் பிடித்தாலும் வெ ளியே காட்டி கொள்ளமாட்டே ன்.

பாடல்கள் தான் பிடிக்கவில்லை , சரி படம் பிடிக்கும் என்று நினை த்த எனக்கு அதை விட மிகுந்த ஏமாற்றம் காத்திருந்தது. ஒரு அரும்பும் நாத்திகவாதியாய் இருந்த எனக்கு அந்த படத்தில் சொல்லப்பட்ட ஆத்திகவாத கருத்துகள் மிகவும் cringe-ஆக பட்டது.
எந்நே ரமும் பீடியும் பாட்டிலும் கை யுமாய் இருக்கும் ரஜினிக்கு ஏழு மந்திரம் ஒரு பாபா மூலம் கிட்டுவதும், அது கொடுக்கப்பட்ட பின் ரஜினி அதனை துஷ்ப்ரயோகம் செ ய்து கடை சியில் ஒரு கடவுள் பக்தனாய் மாறி தன்னுடை ய சமூகத்துக்கு நல்லது செ ய்வதும் எனக்கு லாஜிக்காக ஒர்க் ஆகவில்லை .
நான் ஒரு பெ ரிய முரணாளியாக இருந்த காலமும் அது. அதாவது அனை வருக்கும் பிடித்த ஒன்று இருந்தால், அது எனக்கு பிடிக்கவில்லை என்று சொல்வதில் எனக்கு ஒரு கர்வம், ஒரு ஆனந்தம். ஆங்கிலத்தில் contrarian என்று சொல்லலாம். ஆனால் பாபா பெ ரிதாக வெ குஜன மக்கள் மனதில் ரஜினியின் பிற படை ப்புகள் போல பதியவில்லை என்பது அனை வரும் அறிந்த உண்மை யே . என்னுடை ய விமர்சனமும் மக்களின் விமர்சனமும் ஒத்தி இருந்ததால் நான் பல ஆண்டுகளாக பாபாவின் பாடல்களை யோ படத்தை யே மறுபரிசீலனை செ ய்யவே இல்லை .
என்னுடை ய கடவுள் மறுப்பும் நான் ஒரு contrarian-ஆக இருந்ததின் வெ ளிப்பாடே . கடவுள் நம்பிக்கை சிறிது இருந்த காலத்தில் என் மனதில் மிகுந்த பயம் இருந்ததை யே என்னால் நினை வுகூற முடிகிறது. மாறாக கடவுள் பக்தியை நான் உணர்ந்ததே இல்லை . பல தடவை என் ஆழ்மனம் கடவுளை ஒரு கெ ட்ட வார்த்தை சொல்லி திட்டும். அந்த பொழுதில் என் மனதை யே நான் தண்டிப்பதற்காக என்னை நானே அடித்து இருக்கிறே ன். அந்த வார்த்தை என் சிறிய தண்டனை களை மீறியும் என் மனதில் உதித்தால், அந்த வார்த்தை யில் இருந்து விடுபட நான் என் வீட்டு பக்கத்தில் இருக்கும் வெ ளியில் பை சன் பட வனத்தி கிட்டானை போல ஓடியும் இருக்கின்றே ன்.
இப்படி இருந்த என் மனதில் எப்பொழுது நாத்திகவாத சித்தாந்தம் முளை த்தது என்று என்னால் இப்பொழுது சரியாக யூகிக்க முடியவில்லை . ஆனால் நான் எப்பொழுது ஒரு முழுநே ர நாத்திகவாதன் ஆனே ன் என்று என்னால் உறுதியாக கூற முடியும். அதற்க்கு நாம் 2004 க்கு செ ல்ல வே ண்டும்.
நேற்றை ய சில சிந்தனை கள் “பொய்” ஆனதும், சில சிந்தனை துளிர்கள் ஆழ்ந்து வே ர் கொண்டதும் அடுத்த சில வருடங்களில் நடந்தது. அன்பே சிவம் வெ ளி வந்த வருடம் 2003. இந்த படத்தை நான் திருட்டு வீசீடீ-இல் பார்க்க கிட்டாமல் தொலை க்காட்சியில் மறுஒளிபரப்பிலே யே பார்த்தே ன். பார்த்த ஆண்டு 2004 அல்லது 2005 ஆக கூட இருக்கலாம்.
மகாநதியை அடுத்து எனக்குள் பெ ரிய விளக்க முடியாத தாக்கத்தை ஏற்படுத்தியது அன்பே சிவம். நாட்கள் கடக்க கடக்க, அன்பே சிவம் எனக்குள் ஒரு புரட்சியை உருவாக்கியது என்று சொன்னால் அது மிகை யாகாது. எனக்குள் இருந்த அனை த்து மதரீதியான கே ள்விகளுக்கும் விடை கிடை த்தது போலவும், மதங்களின் மற்றும் கடவுள்களின் மே ல் இருந்த கோவத்தை எனக்கே நன்றாக விளக்கி சரியாக காட்டியது போலவும் இருந்தது.
மெதுவாக என் மனதில் இருந்த கொஞ்ச நஞ்ச கடவுள் நம்பிக்கை யும் மறை ந்தது. அம்மாவுடன் கோவிலுக்கு வே ண்டா வெ றுப்பாக செ ல்ல ஆரம்பித்தே ன். வெ ளிப்படை யாக கடவுள் இல்லை என்று என் நண்பர்களிடமும், என் பெ ற்றோர்களிடமும் நான் சொல்லி இருக்கிறே ன். அனை த்து மதங்களும் மூடர்களின் நம்பிக்கை எனவும், கோவில்கள் திருடர்கள் கூடும் இடம் என்றும் நான் கொக்கரித்தே ன். என்னுடை ய டீனே ஜ் பருவம் முழுவதும் நான் அனை த்து கடவுள் பக்தியாளர்களை கண்டும், அவர்கள் பின்பற்றும் விரிவான கடவுள் வழிபாட்டு முறை களை யும் கண்டும், ரகசியமாக மனதிற்குள் ஏளனமாக சிரித்தது உண்டு.
லை ஃப் ஆஃப் பை (Life of Pi) படத்தில் வரும் பய் படே ல் (Pi Patel) கதாபாத்திரம் எந்த அளவுக்கு அனை த்து மதங்களை யும், ஆன்மீக சித்தாந்தத்தை யும் கற்க ஆசை கொண்டு, உலகத்தை பற்றின மற்றும் தன்னை பற்றின உண்மை யின் தே டலின் ஆழ்கிறானோ, அதற்கு நே ர்மாறான ஒரு திசை யில் நான் செ ன்றே ன். என் மனம் அனை த்து மதங்களை பற்றிய செ ய்திகளை யும், கட்டுரை களை யும், பே ச்சுரை களை யும் புறக்கணிக்க ஆரம்பித்தது.
உலகத்தில் நடக்கும் அனை த்து கொடுமை களுக்கும் காரணம் மதம் தான். இந்த மதம் எனும் மதம் என்று மக்கள் மனதில் இருந்து அகல்கிறதோ அன்று தான் நமக்கு விடிவெ ள்ளி என்ற ஒரு குறுகிய பார்வை க்கு நான் வந்து சே ர்ந்தே ன். மே ன்னாட்டு முன்னே ற்றம் அனை த்தும் கடவுள் மறுப்பால் மட்டுமே வந்ததாகவும், மத்திய கிழக்கு நாடுகள் இஸ்லாமின் இரும்பு கை ப்பிடியிலும், இந்தியா இந்துமதத்தின் கை ப்பிடியில் சிக்கி சின்னாபின்னமாவதாகவும் நான் உறுதியாக நம்பினே ன். அனை த்து உலகமும் மதத்தை கை விட்டு மே ன்னாட்டு கலாச்சாரத்தை பின்பற்றவே ண்டும் என்றும், இப்பாதை யே முன்னே ற்றத்துக்கு ஒரே வழி என்றும் ஆணித்தனமாக நான் நம்பினே ன்.
மேலே சொன்னது போல, கடவுள் நம்பிக்கை என் மனதில் “பொய்” ஆனது. நாத்திக சிந்தனை ஒரு சிறிய கனலாக தொடங்கி பெ ரும் காட்டுத்தீயாக பரவிற்று. வரலாறு படித்து இருந்தால் நான் வே று பாதை யில் செ ன்று இருக்கலாம், என்னுடை ய தே டல்களுக்காக. வரலாறு படித்து உரை க்காத காரணத்தினால், என்னுடை ய பதின்ம பருவ கோவம் (teenage angst) முழுதும் மதத்தின் மேல் இறங்கியது.
ஆனால், அதே திரை ப்படத்தில் கமல்ஹாசன் கூறிய பொதுவுடை மை கோட்பாடுகளும், முதலாளித்துவத்தை எதிர்த்து, அதனை கறாராக மறுத்த முற்போக்கு யோசனை களும், அமெ ரிக்க ஏகாதிபத்தியத்தை சாடி பே சிய அனை த்து கருத்துகளும் என் செ விட்டு காதுகளில் விழவே இல்லை . அனை த்து மதங்களும் தீயசக்திகள் என்ற ஒரு மே லோட்டமான பார்வை யே எனக்கு வெ குநாட்களாக இருந்தது.
மாற்றங்கள் வினா. மாற்றங்களே விடை . வருடங்கள் பல கடந்தன. புத்தகங்கள் பல கடந்தன. காணொளிகள் பல கடந்தன. திரை ப்படங்கள் பல கடந்தன.
கிறிஸ்துவ பாசிசமும், இந்துத்வமும், அடிப்படை வாத இஸ்லாமும் ஓங்கிக்கொண்டு இருக்கும் தற்பொழுது உலகினில், contrarian-ஆன என் மனது, கடவுள் பயத்தில் இருந்து கடவுள் மறுப்பாளனாகி பிறகு ஒரு கடவுள் அலட்சியவாதியாக உருமாறி இருக்கின்றது. இம்மாற்றங்கள் அனை த்திலும் எந்த ஒரு சமயத்திலும் நான் கடவுள் பக்தியை என் மனமார உணர்ந்தது இல்லை .
கமல்ஹாசன் பறை சாற்றிய இடதுசாரி கொள்கை கள் எனக்கு ஓரளவுக்கு புரிய தொடங்கியது. கடவுள் மறுப்பு மட்டுமே என்னுடை ய முழு தனித்தன்மை யாக இல்லாமல் போனது. ரஜினி பாபா படம் மூலம் சொல்ல முற்பட்ட ஆன்மீக கூற்றுகள் சற்றே னும் விளங்க தொடங்கியது. இறை தே டல், ஒரு மனிதன் தன்னை யே புரிந்து கொள்ள இருக்கும் ஒரு கருவி என்று புரிந்தது. அனை த்து மதங்களும் அந்தந்த சமயத்தின் உற்பத்தி முறை யினால் (mode of production) துஷ்ப்ரயோகம் செ ய்யப்பட்டு, பிரிவினை வாத அரசியல் செ ய்ய பயன்படுத்த படுவது விளங்கியது.
என்னால் எப்பொழுது எனக்கு மதம் மே ல் இருக்கும் கடினமான பார்வை இளகியது என்று சரியாக சொல்ல தெ ரியவில்லை . அது காலப்போக்கில் என் வாசிப்பால், உண்மை யின் தே டலால், அறம் மே ல் இருக்கும் காதலால், நெ ருங்கிய நண்பர்களுடன் நடந்த உரை யாடலால் வந்த ஒரு பக்க விளை வே . முக்கிய காரணம் நான் இப்புத்தகங்களை , இடது சாரி சிந்தனை களை முன்வை க்கும் படங்களை எல்லாம் படித்தும் பார்த்தும் இருக்கிறே ன் என்று மார் தட்டி கொள்வதில் ஒரு சிறு பெ ரும் கர்வம் தான்.
கடவுள் பக்தியில் ஆழ்ந்து உடல் கடந்த அனுபவம் அனுபவித்த மனிதர்களை பார்த்து இப்பொழுதெ ல்லாம் எனக்கு பொறாமை யும் வருகிறது. ஒரே ஒரு முறை எனக்கும் அவ்வாறு நிகழ்ந்து என்னுடை ய குறை நிறை களை அந்த கடவுள் மே ல் இறக்கி வை க்க முடியாதா என்று.
இக்கணத்தில், என்னை நானே பரிசீலித்து பார்க்கை யில் விளங்குவது நான் கண்டிப்பாக ஒரு ஆத்திகனல்ல என்பதே . அதே சமயத்தில், நான் ஒரு நூறு சதவிகித நாத்திகனுமல்ல. கடவுள் என்று ஒன்று இருந்தால் அந்த சக்தியை மனிதனால் புரிந்து கொள்ள முடியும் என்றும், அதை ஆட்கொள்ளவும் முடியும் என்றும் நினை க்கும் மற்றும் எந்த கட்சியிலும் சாராது நிற்கும் மனிதன் நான்.
இப்போதை க்கு.
இக்கட்டுரை யை நான் இக்கணத்தில் எழுத மிக பிரதானமான காரணம் ரியன் ஜான்சன் (Rian Johnson) இயக்கத்தில் சமீபமாக வெ ளிவந்த வே க் அப் டெ ட் மே ன் (Wake Up Dead Man) திரை ப்படமே . அப்படம் பார்த்து முடித்த சமயமே , இதுவரை வெ ளிவந்த மூன்று நை வ்ஸ் அவுட் (Knives Out) படங்களில் எனக்கு மிகவும் பிடித்த, யோசிக்க வை த்த படமாக அது மாறியது. காரணம் அப்படம் கை யாண்ட மை ய கருத்துகள் தான்.

மதமும், அதன் மீது இருக்கும் நம்பிக்கை யும் எப்படி ஒரு மனிதனை மாற்றுகிறது, எவ்வாறு அவனுக்கு வாழ்க்கை யை கடக்க உறுதுணை யாக இருக்கிறது என்றும் மாறாக எவ்வாறு அதே மதம் அதே மதத்தை பின்பற்றும் வே று ஒரு மனிதனின் மனதில் ஒரு விஷச்செ டியை போல் படர்ந்து அதிகார ஆசை யை அவனுள் வளர்க்கின்றது என்றும் வெ கு சுவாரஸ்யமாக வும் ஜனரஞ்சமாகவும் படமாக்க பட்டுள்ளது.
மதம் மனிதம் இல்லாமல் வெ றும் பயத்தினை மட்டுமே அடிப்படை யாக வை த்து பின்பற்ற பட்டால் என்ன விளை வை சந்திக்க நே ரிடும் என்றும் அதே மதம், மனிதமோடு சே ர்ந்தால் கொலை யே செ ய்த ஒருவனுக்கு அவனுடை ய வாழ்க்கை யை மறுசீரமை க்க எப்படி ஒரு பெ ருமுதவியாகவும் இருக்க கூடும் என்று இத்திரை ப்படம் மிக அழகாக சித்தரித்து இருந்தது. படத்தின் climax-இல் பெ ருமை மிக்க நாத்திகனான பெ ண்வா பிளாங்க் (Benoit Blanc), கொலை மர்மத்தை தீர்க்கும் தருவாயில் காட்டும் மனிதமும், ஆழ்ந்த மதநம்பிக்கை யுள்ள ஆத்திகனான ஃபாதர் ஜட் டூப்ளெ ன்டிஸி (அற்புதமான நடிப்பில் Josh O’Connor சித்தரித்த Fr. Jud Duplenticy) கொலை யாளியின் மரண தருவாயிலும் அவருக்காக பிரார்த்திக்கும் மனிதமும், மதத்தின் மே ல் இருக்கும் எனது மரியாதை யை மே ம்படுத்தியது. மதமும் மனிதமும் பிரிக்க பட வே ண்டியவை அல்ல என்று எனக்கு நினை வு உறுத்தியது.
என் மனை வி தற்பொழுது 36 வாரம் கர்பமாக இருக்கிறாள். இன்னும் சிலவாரங்களில் நாங்கள் தாய் தந்தை யராக ஆகவிருக்கிறோம். சிலவாரங்கள் முன்பு பிரசவமருத்துவர் என்னை பிரசவ நே ரத்தில் கே ட்பதற்காக இனிமை யான, மெ ன்மை யான பாடல்கள் கொண்ட ஒரு playlist-ஐ தயார் செ ய்ய சொன்னார்கள். நான் அந்த playlist-இல் add செ ய்த ஒரே ஒரு பாடல் கீழே .